முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம்

புதன்கிழமை, 3 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது. 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம் தேதி துவங்குகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் நேற்று அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும்.

மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது. மேலும் தேர்வு தொடர்பான விவரங்களை அறிய தேர்வு கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து