முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 2007-ல் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, பீட்டர் முகர்ஜி மற்றும் அவரது மனைவி இந்திராணி முகர்ஜிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ். மீடியாவில், அதிகளவு வெளிநாடு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் உதவி செய்துள்ளார். இதன் மூலம், சிதம்பரம் மகன் கார்த்திக்கு பலன் கிடைத்துள்ளது. இந்திராணி முகர்ஜி மூலம் கிடைத்த பலன் மூலம், ஸ்பெயின், இந்தியா, பிரிட்டனில், சிதம்பரமும், கார்த்தியும் சொத்துகளை வாங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை வைத்து இந்த குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஐ.என்.எக்ஸ். மீடியாவில் வெளிநாட்டு முதலீடு செய்வதற்கு சிதம்பரம் மற்றும் சிலர் ரூ.10 லட்சம் பணம் லஞ்சமாக வாங்கியதாக கூறப்பட்டிருந்தது. ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இதன் பின்னர் அக்டோபர் 16-ம் தேதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். 3 மாதங்களுக்கு மேல் டெல்லி திகார் சிறையில் இருந்த சிதம்பரத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தான் ஜாமின் கிடைத்தது.

ஐ.என்.எக்ஸ். மீடியா மோசடி வழக்கில், கடந்த 2017 மே மாதம், ஐ.என்.எக்ஸ்., மீடயாவுக்கு கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாட்டு நிதி கிடைப்பதற்கு, வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதன் பின்னர் 9 மாதங்கள் கழித்து சிதம்பரம், கார்த்தி, மற்றும் சிலர் பணமோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து