தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலடி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

புதன்கிழமை, 3 ஜூன் 2020      தமிழகம்
RB Udayakumar 2020 04 01

Source: provided

மதுரை : தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி எதிர்க்கட்சிகளின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டிற்கு முதல்வர் சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் இயங்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை ஆய்வு செய்த வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உலகையே அச்சுறுத்தி வருகிற இந்த கொரோனா வைரஸ் நோயை தமிழகத்தில் கட்டுப்படுத்துவதற்கு முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருந்து வருகிறார். இந்த தடை காலத்திலும் 3,280 கோடி ரூபாய் அளவில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கிய வருவது மட்டுமல்லாது, தொடர்ந்து தினந்தோறும் 7 லட்சம் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வண்ணம் அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்பட வைத்து தமிழகத்தில் ஒருவேளை கூட யாரும் பட்டினியாக இல்லை என்ற சூழ்நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார்.  

தமிழகத்தில் இந்த நோய் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டிலே இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது தொழில் வளம் நெறிந்த மாநிலங்களில் கூட பொருளாதார வனர்ச்சி பின்தங்கி உள்ளது. ஆனால் தமிழகத்தில் முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த எல்ரா செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனம் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்து நாடு தழுவிய ஆய்வு நடத்தியது.

அதில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம், பஞ்சாப், கேரளா, அரியானா, கர்நாடகா ஆகிய ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு மட்டும் 27 சதவீதம், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்த ஐந்து மாநிலம் முன்னணியில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

மின் நுகர்வு, போக்குவரத்து, மொத்தவிலை, சந்தைக்கு விவசாய விளை பொருட்கள் வரத்து, கூகுள் அலைப்பேசி டேட்டா பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் தொழில் வளர்ச்சியில் அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பொருளாதார பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் பின்தங்கியுள்ளன என்று கூறியுள்ளனர்

தமிழகத்தில் வேளாண் சந்தை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்று பாராட்டியுள்ளனர். இந்த 70 நாட்களுக்கு மேலான தடைகாலத்தில் முதல்வர்  மதிநுட்பத்துடன், பொருளாதார ஞானியாக சிறப்பாக செயல்பட்டதால் இன்றைக்கு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்று பாராட்டுகின்றனர். 

ஆனால் எதிர்க்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் தமிழகத்தில் பொருளாதார வீழ்ச்சி என்று குற்றம் சாட்டி வந்தனர் எதிர்க்கட்சிகளின் இந்த பொய்யான குற்றச்சாட்டிற்கு எல்லாம் சரியான பதிலடியை இன்றைக்கு முதல்வர் கொடுத்துள்ளார்.  இந்த அரசை எப்படியாவது களங்கம் சுமத்த வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார் ஆனால் தனது அயராத உழைப்பால் தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களை எல்லாம் முதல்வர் தகர்த்தெறிந்து உள்ளார் அதற்கு இந்த பொருளாதார வளர்ச்சியே ஒரு சான்று.  மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகள் செயல்படுத்துவதில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. நிசார்கா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து புயல் நகர்வை கண்காணித்து வருகிறோம்.

வடகிழக்கு பருவமழை என்பது அந்தந்த காலகட்டங்களில் நமக்குக் கிடைக்கும். இருப்பினும் பிற மாநிலங்களில் அறியக்கூடிய அளவுக்கதிகமான மழையானது உபரிநீர் நமது தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக 10 நபர்களுக்கு முதியோர் உதவிததொகையும், 5 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 5 நபர்களுக்கு விபத்து நிவாரணமும் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்  வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது மாவட்ட கலெக்டர் வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராஜசேகரன், துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.பிரியா ராஜ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து