முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக நன்மைக்கான இணைந்து பணியாற்ற வேண்டும்; இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

இந்திய- ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த மாநாடு டெல்லியில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க கடந்த ஜனவரி மாதம் ஆஸ்தி ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அவரது பயணம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான  உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,

கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதிகளையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும். மேலும், ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா உறவு மிகவும் இயல்பான உறவு. உலக நன்மைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த தொற்றுநோயின் பொருளாதார மற்றும் சமூக பக்க விளைவுகளை சமாளிக்க உலகிற்கு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு அணுகுமுறை தேவை. ஆஸ்திரேலியாவுடனான உறவை விரிவுபடுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இது இந்தோ - பசிபிக் பிராந்தியத்திற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இன்றியமையாதது. இந்தியா - ஆஸ்திரேலியா உறவுகள் ஆழமடைந்துள்ளன. இந்த ஆழம் எங்கள் பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட ஆர்வங்கள், பகிரப்பட்ட புவியியல் மற்றும் பகிரப்பட்ட நோக்கங்களிலிருந்து வருகிறது என்று கூறினார்.

மேலும் கொரோனா காலத்தில் இந்திய மாணவர்களுக்கு உதவியதற்கு ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
நீங்கள் எப்போதும் தொழில்நுட்ப துறையில் ஒரு முன்னோடியாக இருந்தீர்கள். அடுத்த முறை இந்தியா வரும் போது, பாசமாக உங்களை கட்டியணைத்து சமோசா மற்றும் குஜராத் கிச்சடி கொடுப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் மருந்து பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் தாது உப்புகள் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து