முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாளிகள் தாயகம் திரும்ப அனைத்து விமானங்களுக்கும் அனுமதி: பினராய் பேட்டி

வியாழக்கிழமை, 4 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் மலையாளிகள் தாயகம் திரும்ப வசதியாக கேரளத்தில் வந்தே பாரத் திட்டத்தின்படி அனைத்து நாட்டு விமானங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராய் விஜயன் கூறியதாவது:

வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் மலையாளிகளைத் தாயகம் அழைத்துவர வசதியாக வந்தே பாரத் திட்டத்தின்படி கேரளாவுக்கு எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம் என மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் 2-ம் தேதி வரை 140 விமானங்கள் மூலம் 24,333 பேரும், 3 கப்பல்கள் மூலம் 1,488 பேரும் மொத்தம் 25, 821 பேர் வெளிநாடுகளில் இருந்து கேரளம் வந்துள்ளனர். மேலும், கேரள மக்களை அழைத்து வர வசதியாக கேரளத்தில் அனைத்து நாட்டு விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டு விமானத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து