முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளி இங்கிலாந்து அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்று இல்லை

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் வர்த்தக அமைச்சராக பதவி வகிப்பவர் அலோக் சர்மா (வயது 52). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த 3-ம் தேதி அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பெருநிறுவன திவால் மற்றும் ஆளுமை மசோதா மீதான விவாத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அடிக்கடி கைக்குட்டையால் தனது முகத்தை அவர் துடைத்துக் கொண்டார். அவர் அவதிப்படுகிறார் என உணர்ந்த எதிர்க்கட்சியான தொழில் கட்சியின் நிழல் வர்த்தக மந்திரி எட் மிலிபாண்ட், அவருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தார்.

பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு திரும்பி விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அலோக் சர்மா, தன்னை வீட்டில் சுய தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் விரைவில் குணம் அடைந்து திரும்புவதற்கு நிழல் வர்த்தக அமைச்சர் எட் மிலிபாண்ட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

இந்நிலையில் அலோக்க சர்மாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் முதலில் இளவரசர் சார்லஸ் அடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது வர்த்தக அமைச்சர் அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடைபெற்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து