முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பம் வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப தமிழக அரசு வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வீர சாகச செயல்களுக்காக தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமாய் அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு  ஆண்டும்  தமிழக முதல்வரால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5.00 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த,  துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த  பெண் விண்ணப்பதாரர் மட்டுமே  இவ்விருதினைப்  பெறத்  தகுதியுள்ளவர்.

2020-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600009 என்னும் முகவரிக்கு 30.06.2020-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். விருதுபெறத் தகுதியுள்ளவர்,  இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட  தேர்வுக் குழுவால்  தெரிவு செய்யப்படுவார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து