முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 28,694-ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 1438 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;-

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 15,762 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 861 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 232-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1116 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 19,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 73 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 11,345 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 5,60,673 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 54.93 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,692 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 1438 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும். கொரோனா பாதிப்பு குறித்த எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை.

இறப்பு, பரிசோதனைகளை குறைத்து சொல்வது அடிப்படை ஆதாரமற்றது. 30 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து கொரோனா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகள், மருந்துகள் இல்லமால் சிகிச்சை அளிக்கும் முறையை அரசு பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து