முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா? : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

இஸ்லாமாபாத் : நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் உயிரிழந்து விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற 1993 மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் உள்பட பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதா  தாவூத் இப்ராகிம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

அதன்பேரில் பாகிஸ்தானிடம் தகவல்கள் வழங்கியும், அந்த நாடு தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன் தங்கள் நாட்டில் அவர் இல்லவே இல்லை என உறுதிபட மறுத்து வருகிறது.தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார் என்பது தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் பாகிஸ்தான் அதனை தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில்  தாவூத் இப்ராகிமிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் கூறியிருக்கிறார்.

தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் வீட்டில் இருப்பதாகவும் அனீஸ் தொலைபேசி மூலம் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து