முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா கூறினார்.

கால்நடைத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில்  நடைபெற்றது. இதில் அத்துறை அமைச்சர் பிரபுசவான் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:- 

கிசான் கிரெடிட் அட்டை மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு அதிகாரிகள் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதை தடுக்க தேவையான தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். 

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரூ. 80 கோடி செலவில் குடிசை பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு 7.75 லட்சம் லிட்டர் பால் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது. ஆடு, கோழி இறைச்சி வினியோகத்தில் எந்த தடையும் ஏற்படவில்லை. ஊரடங்கின்போது, மைசூரு மற்றும் தாவணகெரேயில் பறவை காய்ச்சல் உண்டானது. பீதரில் பன்றி காய்ச்சல் பரவியது. இதை வெற்றிகரமாக செயல்பட்டு மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து