முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 பணியாளர்களுக்கு கொரோனா: மத்திய சுகாதார அமைச்சகம் மூடல்

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 5 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், நேற்று முதல் 2 நாளைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மூடப்படுகிறது. தீவிர சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலில் சிக்கி தவிக்கிறது. அங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதாரத்தை கவனிக்கிற மத்திய சுகாதார அமைச்சகத்தினுள்ளும் (நிர்மாண் பவன்) கொரோனா வைரஸ் கால் பதித்துள்ளது.

அங்கு ஒரு வார காலத்தில் ஒரு இயக்குனர், ஒரு துணைச்செயலாளர், ஒரு டாக்டர், 2 ஊழியர்கள் என 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இவர்கள் சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மாண் பவன் கட்டிடத்துக்கு அடிக்கடி சென்று வந்தவர்கள் ஆவர்.

எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இன்னும் சிலருக்கு அங்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல அதிகாரிகளுக்கும் கூட தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை சில நேரங்களில் அங்கு பின்பற்ற முடியாமல் போய் விடுவதாக சொல்லப்படுகிறது.  சுகாதார அமைச்சகத்தில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திப்புகள், கூட்டங்கள் அனைத்தும் காணொலி காட்சி வழியாக மட்டுமே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழலில் பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கடந்த 7 நாட்களில் 5 பேருக்கு அங்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர வைப்பதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2 நாட்களுக்கு (நேற்றும், இன்றும் ) மூடப்படுகிறது. இந்த 2 நாட்களும் அங்கு தீவிரமாக சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து