முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் முன்னாள் கால்பந்து வீரர் சந்தோஷ் கொரோனாவுக்கு பலி

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா வைரஸுக்கு முன்னாள் கால்பந்து வீரர் பலியானார், இதனுடன் கேரள கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

61 வயதான் ஹம்சா கோயா என்ற இந்தக் கால்பந்து வீரர் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடருக்காக மகாராஷ்ட்ரா அணியில் ஆடினார். இவர் மும்பையிலிருந்து மே 21-ம் தேதி கேரளா திரும்பினார். மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவமனையில் ஹம்சா கோயா சிகிச்சைப் பெற்று வந்தார். இவருக்கு நிமோனியா மற்றும் தீவிர சுவாசக்குழாய் பிரச்சினை இருந்தது. 

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி இவரது உடல் நிலை மோசமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் நிலை இந்தச் சிகிச்சைக்கு சரியாக வினையாற்றவில்லை, சிகிச்சையை உடல் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்குச் சென்றது.

இதனையடுத்து அவர் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு இறந்து போனார். இவரது மனைவி, மகள், மருமகள், 3 வயது மற்றும் 3 மாத பேரக்குழந்தைகள் ஆகியோருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து