முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைனில் திரைப்படம் வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சனிக்கிழமை, 6 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  ஆன்லைனில் திரைப்படம் வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. எனவே, கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், அமெஸான் பிரைமில் உள்ளிட்ட ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இன்னும், முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்றும்,  திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்று   அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் எனக்கூறினார். சமீபத்தில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியான நிலையில் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து