முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாராலும் கட்டுப்படுத்த முடியாத கொரோனாவை அமெரிக்கா வீழ்த்தும் : அதிபர் டிரம்ப் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : யாராலும் கட்டுப்படுத்த முடியாத கொரோனா வைரஸை அமெரிக்கா வீழ்த்தும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரசால் மற்ற நாடுகளை விடஅமெரிக்கா மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 21.42 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரேநாளில், 702 பேர் உயிரிழந்துள்ளனர்; இதுவரை, 1.17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்கள், பொருளாதார நடவடிக்கைகளுக்காகத் தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கால் வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும் என, சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். 

இந்நிலையில் அமெரிக்க ராணுவ அகாடமியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:- சீனா எனும் தொலைதூர தேசத்தில் இருந்து நம்முடைய நாட்டுக்கு இந்தப் புதிய கொரோனா வைரஸ் வந்துள்ளது. கொரோனா வைரஸ் ஒரு வெல்ல முடியாத எதிரி. அதை யாராலும் கட்டுப்படுத்திட முடியாது. ஆனால், விரைவில் அந்த வைரசை அமெரிக்கா தோற்கடிக்கும். அமெரிக்க சமூகத்துக்கு ராணுவம் அளித்திருக்கும் பங்கு நம் அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது.

கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்து போராட முன்வந்த தேசிய பாதுகாப்புப் படை, ஆயுதப்படை என ஒவ்வொரு பிரிவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதலே சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை டிரம்ப் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து