முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகவத் கீதை மூலம் உறுதி, வலிமை பெறுவோம்: அமெரிக்க எம்.பி. பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஒரு புறம் கொரோனா வைரஸ் பரவல் மறுபுறம் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை அடுத்து நிறவெறிக்கு எதிரான போராட்டங்களின் பரவல் என்று தத்தளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்து மதத்தைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் எம்.பி. துளசி கப்பார்ட் இந்து மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது எம்.பி. துளசி கப்பார்ட் கூறுகையில், 

இது ஒரு குழப்பமான காலக்கட்டம். ஆனால் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்குக் கற்றுக் கொடுத்த பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் மூலம் உறுதி, மனவலிமை மற்றும் அமைதியை நாம் எட்ட முடியும். இந்த நேரத்தில் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்பதை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இது ஒரு ஆழமான கேள்வியாகும். மற்றும் கடவுளுகும், கடவுளின் குழந்தைகளுக்கும் சேவை செய்வதே நோக்கம் என்பதை நீங்கள் உணர்ந்து விட்டால் நீங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

வெற்றி என்பது ஆடம்பரப் பொருட்களால், சாதனைகளால் வரையறுக்கப்படுவதில்லை. சேவையை மையமாகக் கொண்டு அமையும் மகிழ்ச்சியான வாழ்க்கைதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று எம்.பி. துளசி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து