முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி : சிலி சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் ராஜினாமா

திங்கட்கிழமை, 15 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

சான்டியாகோ : கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிலி நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. அங்கு 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

அந்த நாட்டில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் கொரோனா விவகாரத்தை சரியாக கையாளாததே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. 

இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ஜெய்மி மனாலிக் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பினேராவிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை அதிபர் ஏற்றுக்கொண்டார். புதிய சுகாதாரத்துறை மந்திரியாக என்ரீக் பாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவரும் அறுவைசிகிச்சை நிபுணருமான என்ரீக் பாரீஸ் கூடிய விரைவில் நாட்டில் கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வருவேன் என உறுதி பூண்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து