முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் உணவு சந்தை மூலம் 79 பேருக்கு கொரோனா : 2-வது அலை உருவானதாக மக்கள் அச்சம்

திங்கட்கிழமை, 15 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : சீனாவில் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், கொரோனா வைரசின் இரண்டாவது அலை உருவாகி உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. 

சீனாவில் 50 நாடகளுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசின் 2 - வது அலை உருவாகி உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. பீஜிங்கில் உள்ள ஜின்ஃபாடி உணவு சந்தை மூலம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஜின்ஃபாடி உணவு சந்தை மூலம் இதுவரை 79 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சந்தை மூடப்பட்டது. சந்தைக்கு வருகை தந்த அல்லது அங்கு இருந்தவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. சந்தையை சுற்றி உள்ள பல குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து