முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரசுக்கு எதிரான முதல் வெற்றி : பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 15 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பாரீஸ் : கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் அறிவித்து உள்ளார். 

தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறியதாவது:- 

கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் ( நேற்று ) முதல் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது. எதிர்வரும் 22 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறுவர் பள்ளிகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரையான நாட்டின் கொரோனா இறப்பு எண்ணிக்கை 243 ஆக குறைந்து, உள்ளது. முந்தைய வாரம் இந்த எண்ணிக்கயானது 353 என இருந்தது.திங்கட்கிழமை முதல் ஒரு புதிய அத்தியாத்தை தொடங்க உள்ளோம். பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முகக்கவசம் பயன்படுத்துவதும் ஊக்குவிக்கப்படும்.

திங்கட்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும். ஜூலை 1 - ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும் என கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து