முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்திற்கு மீண்டும் சென்ற கொரோனா; கவலையில் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன்

செவ்வாய்க்கிழமை, 16 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வெல்லிங்டன் : உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அனைத்து நாடுகளும்  மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இத்தகைய கொடூர காலத்தில் நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன் உட்பட 9 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகளாக திகழ்கின்றன. நியூசிலாந்தில் இப்போதைக்கு கொரோனா நோயாளிகள் இல்லை என்பதால் 7 வாரங்களாகக்  கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கடந்த 10-ம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு  பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில்,  நியூசிலாந்திற்கு கொரோனா வைரஸ் மறுவீடு சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு நீங்கிய நாடாக நியூசிலாந்து நிகழ்ந்த நிலையில், 24 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்கள் என்று தெரியவந்துள்ளது. 24 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா வந்துள்ளது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், மீண்டும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து நாட்டின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து