முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைக்கப்படும் : அதிபர் டிரம்ப் தகவல்

புதன்கிழமை, 17 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : ஜெர்மனியில் அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

1949-ல் உருவான நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்பட 29 நாடுகள் உள்ளன. உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ரீதியிலான உறவை வலுப்படுத்துவதையும், ஆயுதங்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. உறுப்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 29 நாடுகளைச் சேர்ந்த படைவீரர்கள் உறுப்பு நாடுகளில் முகாமிட்டு ராணுவ உதவிகளை வழங்குகின்றனர். அந்த வகையில் ஜெர்மனியில் அமெரிக்க படைவீரர்கள் 52 ஆயிரம் பேர் உள்ளனர்.  

இந்த நிலையில் ஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப் பெற இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்த ஜெர்மனி இரு நாடுகளின் உறவும் சிக்கலாக இருப்பதாக கூறியது. இந்நிலையில் ஜெர்மனியில் அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது டிரம்ப் இது குறித்து கூறியதாவது, 

ஜெர்மனியில் எங்கள் வீரர்கள் 5,2000 பேர் உள்ளனர். இது அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கு மிகப்பெரிய செலவாகும். அவர்கள் நேட்டோவுக்கு ஒரு சதவீதம் மட்டுமே செலுத்துகிறார்கள். இது மிகவும் குறைவு. எனவே அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 25 ஆயிரம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து