முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று பாதித்தவர்களை குணப்படுத்த புதிய சிகிச்சை முறை : அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 17 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்த புதிய சிகிச்சை முறையை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஜோல்லா நகரில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரை  சயின்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளின் ரத்தத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் ‘ஆன்டிபாடி’களை (நோய் எதிர்ப்பு பொருள்) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ‘ஆன்டிபாடி’க்கு பெயர் தான் இம்யுனோகுளோபுலின். இது, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்களால் உருவாக்கப்படுகிற ‘ஒய்’ வடிவ புரதம் ஆகும். இந்த ‘ஒய்’ வடிவ புரதத்தை கொண்டு, பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற நோயை உருவாக்குகிறவற்றை அடையாளம் கண்டு அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்க முடியும். இது அப்படியே கொரோனா நோயாளிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இத்தகைய ஆன்டிபாடிகளை ஊசி வழியாக கொரோனா வைரஸ் பாதிப்பில் ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தலாம். இதன் மூலம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அளவு குறையும், நோய் கடுமையாவது தடுக்கப்படும் எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்த ‘ஆன்டிபாடி’களை உயிரியல் தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஏராளமாக தயாரித்து, கடுமையான நோயைத்தடுக்கும் ஒரு சிகிச்சையாகவும், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசியாகவும் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து