முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்போதுள்ள வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும்: அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 25 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரீன் கார்டு நிறுத்தியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் தற்போதுள்ள வேலைவாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.  உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.அதுமட்டுமின்றி, கொரோனா' வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், அமெரிக்காவில் லட்சகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை வழங்குவதை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் ஏப்ரலில் அறிவித்தார்.  இது, இந்தாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை சட்டத்தின்கீழ், ஆண்டுக்கு, 1.40 லட்சம் வெளிநாட்டவருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர், அவருடன் இருக்கும் அவருடைய மனைவி அல்லது கணவர், குழந்தைகளுக்குப் பொருந்தும்.  தற்போதைய நிலையில், கிரீன் கார்டு கேட்டு, 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். மேலும் ஒரு நாட்டுக்கு அதிகபட்சம், 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் அதிக அளவில் பணிபுரியும் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள், கிரீன் கார்டு கிடைப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. தற்போது அது நிறுத்தி வைக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

இதற்கிடையே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் குடியுரிமை அல்லாத, எச்1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்கள் வழங்குவது, இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைத்து, டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.  கிரீன் கார்டு முடிவுக்கான காரணம் குறித்த கேள்விக்கு அதிபர் டிரம்ப் பதிலளிக்கையில், தற்போது அமெரிக்க மக்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். தற்போதுள்ள வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக தான் இந்த முடிவு என, டிரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து