முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய நாடுகளுக்கு சீனாவால் அச்சுறுத்தல்: உலகளவில் படைகளை நியமிக்க பரிசீலிப்பதாக அமெரிக்கா தகவல்

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதை அடுத்து உலக அளவில் படைகளை நியமிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுச்செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீனாவின் பி.எல்.ஏ. ராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாங்கள் சரியான நிலையெடுக்க பரிசீலித்து வருகிறோம்.

காலத்தின் சவால்களை நாங்கள் சிந்தித்து வருகிறோம், எனவே அச்சுறுத்தலை எதிர்கொள்ள போதிய படை ஆதாரங்கள் நம்மிடையே உள்ளதாகக் கருதுகிறேன் என்றார் மைக் பாம்பியோ.

இந்தப் பரிசீலனை அதிபர் டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்படுகிறது, இதன் அங்கமாக ஜெர்மனியில் தன் படைகளை 52,000-த்திலிருந்து 25,000 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது என்றார் மைக் பாம்பியோ.  சில இடங்களில் அமெரிக்கப் படைப்பலத்தை குறைத்து சீன ராணுவத்தினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நாடுகளான இந்தியா, மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, மற்றும் தென்சீன கடல் பகுதி சவால்களை சமாளிக்க அமெரிக்க ராணுவத்தை இப்பகுதிகளில் பயன்படுத்த, இப்பகுதிகளைப் பலப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். 

எனவே அமெரிக்க படைப்பலம் குறைக்கப்படும் நாடுகள் தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீன ராணுவத்தை எதிர்கொள்ள அங்கு படைப்பலத்தைக் கூட்ட முடியும், இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முழு ஆலோசனைகளை மேற்கொள்வோம் என்றார் பாம்பியோ. .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து