முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு எதிரான பிரச்சாரம்: ஈரான் பிரபல நடிகை தரனாஹ் அலிதூஸ்டிக்கு 5 வருட சிறை

வெள்ளிக்கிழமை, 26 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

டெக்ரான் : ஈரானிய நடிகை தரனாஹ் அலிதூஸ்டி, அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் செய்ததாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான தி சேல்ஸ்மேன் என்ற திரைப்படத்தில் ஈரானிய நடிகையான தரனாஹ் அலிதூஸ்டி நடித்திருந்தார். இப்படத்திற்கு 2017-ம் ஆண்டு ஆஸ்கார் விருது (சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்) வழங்கப்பட்டது. இதனால் மிகவும் பிரபலமான தரனாஹ் அலிதூஸ்டி ஈரானில் தெரு ஒன்றில் ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண்ணை போலீசார் தாக்கும் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தாக கூறப்படுகிறது. 

இது அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் உடனடியாக சிறையில அடைக்கப்படுவாரா? என்பது குறித்து தெரியவில்லை.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தரனாஹ் அலிதூஸ்டி  சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. தரனாஹ் அலிதூஸ்டி இந்த ஆண்டின் துவக்கத்தில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஈரான் அரசை விமர்சித்தார். அதுமட்டுமின்றி, ஈரானியர்களுக்கு விசா தடை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராக அலிதூஸ்டி பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து