முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள்: அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் அனைத்து நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டுவரும் வங்கிகள் ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்துக்கு( 2020) ஒப்புதல் அளித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவசரச் சட்டம் பிறப்பித்தார். வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ல்தான் திருத்தம் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இது கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தும் என்று மத்திய அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டு வர கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பஞ்சாப் கூட்டுறவு வங்கி, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். அதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  கூட்டுறவு வங்கியில் உள்ள 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.84 லட்சம் கோடி பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவே விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து நேற்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டில் உள்ள 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வரும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.  இந்த அவசரச் சட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும், கூட்டுறவு வங்கிகள் வலுப்படும். நிர்வாகம் மேம்படும், கூட்டுறவுகளின் செயல்திறன் மேம்பட்டு முதலீடும் அதிகரிக்கும். இந்த அவசரச் சட்டத்தால் மாநிலக் கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் கூட்டுறவு பதிவாளர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் அதிகாரம், எந்த விதத்திலும் பாதிக்காது. 

இந்தத் திருத்தங்கள் முதன்மை வேளாண்மைக் கடன் சொசைட்டிக்கு (பி.ஏ.சி.எஸ்.) அல்லது வேளாண் தொழிலுக்கு நீண்டகாலக் கடன் அளிக்கும் கூட்டுறவு சொசைட்டிக்குப் பொருந்தாது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் 45-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதலீட்டாளர்களின் நலன் காக்கும் வகையில் வங்கியை மறுகட்டமைத்தல், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கி முறையை முறையாகப் பராமரித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து