முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியருக்கு கொரோனா பாதிப்பு: புதுச்சேரி முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடல்

சனிக்கிழமை, 27 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 பேருக்கு பாதிப்பு உறுதியானது.  இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பரிசோதனை நேற்று  முன்தினம் 590 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. 

இதில், புதிதாக புதுச்சேரியில் 27 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் முதல்வர்  அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், அலுவலகத்தில் அவருடன் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்தி கொள்ள கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், இதுபற்றி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதனால், அடுத்த 2 நாட்களுக்கு முதல்வர்  அலுவலகம் மூடப்படுகிறது என கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து