முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்துக்கணிப்பில் ஆதரவளித்த இந்திய மக்களுக்கு அதிபர் டிரம்ப் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசத் தெரியாதவர் அமெரிக்க அதிபராக வரப்போகிறார் என்று அதிபர் டிரம்ப் விரக்தியுடன் கூறியுள்ளார். அதே நேரம் கருத்துக்கணிப்பில் ஆதரவளித்த இந்திய மக்களுக்கு அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப், கடந்த முறை ஒபாமாவை தோற்கடித்து இப்பதவிக்கு வந்தார். அவர், 2-வது முறையாகவும் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆனால், இதில் அவர் வெற்றி பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. மக்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்புகளில் அவருடைய செல்வாக்கு கடுமையாக சரிந்திருப்பது உறுதியாகிறது.  டிரம்ப்புக்கு வயது 74. அவரை விட மூன்று வயது மூத்தவர் ஜோபிடென். ஆனால், நிதானமாக பேசக் கூடியவர். திறமையானவர் என்று மக்களிடம் பெயர் பெற்று விட்டார். இந்நிலையில், பாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

நான் மக்களுக்கு நூறு சதவீதம் பிடித்தவனாகவோ, பிடிக்காதவனாகவோ இருக்கவில்லை. அப்படி தான் இருப்பேன். எப்போதும் என்னை மக்கள் விரும்ப வேண்டும் என்று நினைக்க மாட்டேன். என்னை ஏனோ சிலருக்கு பிடிக்கவில்லை. நான் எடுத்த முடிவுகள் நல்லவை. மக்களுக்கு நன்மை தரக்கூடியவை.

ஆனாலும், சிலருக்கு என் மீதான அன்பு போய் விட்டது. ஜோபிடென் தான் அடுத்த அதிபர். நான் என் வேலையைதான் இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். என் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. ஜோபிடென், அடுத்த அதிபராக வந்து அமரட்டும். நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசக்கூட தெரியாது. இவரை மக்கள் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

அமெரிக்கர்கள் மத்தியில் டிரம்ப் செல்வாக்கு சரிந்த போதிலும், அமெரிக்கவாழ் இந்தியர்கள் அவருக்கு ஆதரவாகவே உள்ளனர். அல் மேசன் நடத்திய கருத்துக்கணிப்பில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் 50 சதவீதம் பேர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு டிரம்ப் நன்றி கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ் அளித்த பேட்டியில், அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்திய வம்சாவளிகளும், இந்திய மக்களும் பெரும் ஆதரவு தெரிவித்து உள்ளதற்கு அதிபர் டிரம்ப் நன்றி கூறியுள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து