முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடன் யார் மோதினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் : மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவுடன் யார் மோதினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் உரையாற்றும் வகையில்  மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையாக மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கீ பாத்  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 

அதன்படி, நேற்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரதமர் நரேந்திர மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, 

2020 சவால் மிகுந்த ஆண்டாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். 2020 எப்போது முடியும் என  மக்கள் பேசி வருகின்றனர். எத்தனை சவால்கள் வந்தாலும் நாம் வென்று காட்டியுள்ளோம். சவால்கள் நிறைந்த ஆண்டு என்பதால் 2020-ம் ஆண்டு மோசமான ஆண்டு அல்ல.  பிரச்சனையை எப்போதும் தனக்கான வாய்ப்பாகவே நாடு மாற்றியுள்ளது.

சவால்களை எதிர்கொண்ட பிறகு நாம் வலிமையாக மாறியிருக்கிறோம். முதல் 6 மாதம் கடுமையாக இருந்தால் அடுத்த 6 மாதமும் நெருக்கடியாக இருக்கும் என  எண்ண வேண்டாம்.

ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது மக்கள் மீண்டும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனாவை கடந்து நாம் வெற்றி நடை போடுவோம். நட்பு பாராட்டவும் தெரியும். பிரச்சனை என்றால் பதிலடி  கொடுக்கவும் தெரியும். லடாக்கில் எல்லையை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நாட்டின் எல்லைகள் காக்கப்படும் என்று கூறினார். மேலும் லடாக் எல்லையில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

இந்தியாவுடன் யார் மோதினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும். எல்லையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.  மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தளவாட உற்பத்தியில் நாம் முன்னணியில் இருக்கிறோம். சுயசார்பை நோக்கி நாடு முன்னேறி  கொண்டே இருக்கிறது.

லடாக் தாக்குதலுக்கு பிறகு உள்ளூர் பொருட்களே வாங்க வேண்டும் என்று பலர் உறுதி எடுத்துள்ளனர். விண்வெளித் துறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் தொழில்நுட்ப துறையில் பல முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து