முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு நேரம் மாற்றி அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் இன்று 29-ம் தேதி முதல் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,923 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 11 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது.   இது தொடர்பாக, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகாவில் இதுவரை ஊரடங்கு நேரம் இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை இருந்தது. இன்று 29-ம் தேதி முதல் இரவு ஊரடங்கு 8 மணி முதல் காலை 5 மணிவரை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 

இதே போல், வரும் ஜூலை 10-ம் தேதியில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும், அனைத்து சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டு இருக்கும். ஜூலை 5-ம் தேதியில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகம் திரும்புவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவித்துள்ள கர்நாடக அரசு, மேலும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து