முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை: அமித்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஜூலை இறுதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் கோவிட் -19 தொற்றுகள் இருக்கும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறிய கருத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். 

சிசோடியாவின் கருத்து பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், டெல்லி இதுபோன்ற மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளாது என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தேசிய தலைநகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாநிலமாகும். டெல்லியில் 80,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 2,558 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 28,000 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக ஜூன் 9 -ம் தேதி நிலவரப்படி கொரோனா தொற்று விகிதங்கள் இரட்டிப்பாவதன் அடிப்படையில் ஜூலை 31-ம் தேதிக்குள் டெல்லியில் 5.5 லட்சம் கொரோனா வைரஸ் தொற்றுகள் இருக்கும் என்று மணீஷ் சிசோடியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து