முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பிரச்சாரங்களில் எங்கள் பாடலை பயன்படுத்தக்கூடாது: அதிபர் டிரம்புக்கு பிரிட்டிஷ் இசைக்குழு எச்சரிக்கை

திங்கட்கிழமை, 29 ஜூன் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : தேர்தல் பிரச்சாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து எங்கள் பாடல்களைப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரபல பிரிட்டிஷ் இசைக்குழுவான ரோலிங் ஸ்டோன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனுமதியின்றி எங்கள் குழுவினரின் பாடல்களை டிரம்ப் தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. அதிபர் டிரம்ப் தொடர்ந்து எங்கள் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தினால், சட்டரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  எங்களிடமிருந்து எந்தவித அனுமதியும் பெறாமல் எங்கள் பாடல்களை டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். வெறுப்புப் பிரச்சாரங்களில் எங்கள் பாடல்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ரோலிங் ஸ்டோன்ஸ் குழுவினரின் மிகவும் பிரபலமான யூ ஆண்ட் ஆல்வேஸ் கெட் வாட் யூ வான்ட் என்ற பாடல் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும். ஏற்கெனவே 2016-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் பாடலை டிரம்ப் பயன்படுத்தியதற்கு ரோலிங் ஸ்டோன்ஸ் குழு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து