முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கோரிக்கை

திங்கட்கிழமை, 29 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு நாட்டின் கவுரமிக்க விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் 100-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் பிரதமரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாக ஓராண்டு விமரிசையாக கொண்டாடப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தலைநகர் ஐதராபாத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் இந்த நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய சந்திரசேகரராவ்,  முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் கவுரமிக்க விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தெலுங்கானா சட்டசபை மற்றும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு பி.வி நரசிம்மராவின் பெயர் சூட்டப்படும் என்றும் சந்திரசேகரராவ் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து