கடலூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் சந்திரசேகர் சகாமுரி நியமனம்

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      தமிழகம்
Chandrasekhar Sakamuri 2020 06 30

Source: provided

சென்னை : கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த அன்புச்செல்வன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதையடுத்து புதிய கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அன்புச்செல்வன். இவர் கொரோனா தடுப்புப் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுடன் அவர் ஓய்வு பெற்றார்.

இதனால் கடலூர் மாவட்ட கலெக்டராக சந்திரசேகர் சகாமுரியை நியமித்து தலைமைச்செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து