முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 மாதங்களுக்கு பின் தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு 10,000 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள கிராமப்புற கோவில்களில் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று  பக்தர்கள் வழிபட தொடங்கினர். கிராமப்புற தேவாலயங்கள் மற்றும் மசூதிகளிலும் நேற்று முதல் வழிபாடு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி தரைத்தளம் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் ஆகிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. எனினும், கிராமங்களில் உள்ள பெரிய கோவில்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து