முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா காலத்தில் காணாமல் போன எதிர்க்கட்சி தலைவர் வீட்டிலிருந்து கபடி பாடிக்கொண்டிருக்கிறார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

புதன்கிழமை, 1 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவொற்றியூர் : கொரோனா நோய் தொற்று காலத்தில் களத்தில் காணாமல் போன தலைவர் வீட்டிலிருந்து கபடி பாடிக்கொண்டிருக்கிறார் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருவொற்றியூர் மண்டலத்தில்  கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிக்கான காய்ச்சல் ஸ்கீரினிங் சென்டர் முகாம்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  தொடங்கி வைத்து,  மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்தார். அப்போது  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது, 

 3.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட  திருவொற்றியூர் மண்டலத்தில்  1504 பேர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்,  பாதிக்கப்பட்ட தெருக்களில் தீவிர நோய்த்தொற்று தடுப்பு பணிகளும் நோய்   கண்டறியும் பணிகளும்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,  திருவொற்றியூரில் கொரோனா தவிர   பிறநோய்கள் கண்டவர்கள்   இருப்பதால் நெருக்கமான மக்கள் இருப்பதால் காய்ச்சல் கிளினிக்  முகாம்கள்  அவசர தேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

இதன் மூலம்  ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறிய உதவும்  என்று  மக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில்  கிளினிக்  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்த நோய்த்தொற்று என்பது உலகளவிய சவாலாகும். இந்த நோய் தடுப்பு பணி, களத்தில் நின்று பணியாற்றி பணியாற்றி கொண்டிருக்கிற மருத்துவர்களை பாராட்டும் வகையில் உலக மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது,

தன்னலம் பாராது, மக்களின் உயிரை காக்கும் கடவுளாக நாம் கருதும் மருத்துவர் சேவை என்பது மகத்தானது. கொரோனா காலக்கட்டத்தில்  மக்கள் உயிரை காக்கும் சேவை  மனித குலத்திற்கு முக்கியமானது. அவசியமானது, தங்களது உயிரை பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்களுக்கு நாம் எப்போதும்  நன்றி உரியவர்களாய் இருப்போம்,  மருத்துவர் சமூதயாத்திற்கு தலைவணக்கம் செலுத்துவோம்.

இன்றைக்கு தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக்க  பொதுவாழ்வில்  இருப்போர் இரவு பகலமாக உழைத்து  வருகிறார்கள்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்.  சிறு தொய்வும் இல்லாமல் நிர்வாக  பணியை முடுக்கி விட்டு  களத்தில் சுழன்று   உயிரை பணயம் வைத்து அவர் உழைக்கிறார். 

அதே போல அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர்கள் பணியாற்றுகிறார்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தின்தோறும் நிர்வாக பணியை முடுக்கி  களத்தில் சுழன்று சுழன்று  தமிழக முழுவதும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உயிரை பணயம் வைத்து மேற்கொள்வதை  மக்கள் வாழ்த்துகிறார்கள். பாராட்டுகிறார்கள்.

இதை பொறுக்க முடியாமல்  உயிர் பயத்தால்  வீட்டில் முடங்கியிருப்பவர்கள்  அறிககையின் மூலம் பல்வேறு  குழப்பங்களை மக்களிடையே  உருவாக்கி  வருவதை கடமையாக கருதுகிறார்கள். ஆகவே   வீட்டில் உயிர் பயத்தால் முடங்கி கிடப்பவர்கள் களத்திற்கு வந்து பல காலம் ஆகி விட்டது,  உயிரை பணயம் வைத்து களத்தில் நிற்பவர்களை விமர்சனம் செய்து அவதூறு பேசுவதை மக்களை விரும்பவில்லை,

இப்படி ஒவ்வொருவரும் உயிர் பயத்தால் முடங்கி அறிக்கை மூலம் மக்களை குழப்பினால் மக்களை காப்பாற்றுவது எவ்வளவு   சவாலானதாக இருக்கும். மருத்துவர்கள்  பொதுவாழ்க்கையில் இருக்கும்   உங்களை போன்ற ஊடகத்தினர் மற்றும் காவலர்கள் உயிரை பணயம் வைத்து எல்லையில்  ராணுவத்தினரும்  பணியாற்றி இருக்கிறார்கள்.

இன்றைக்கு காவல்துறையில் எந்த குறிக்கீடும் இல்லை.  நீதி மன்றம் வழிகாட்டும் அடிப்படையில்   சி.பி.ஐ. விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தப்படும் போது  அதற்காக  உத்தரவிடும்  நீதிமன்றம் நீதியரசர்கள் வழிகாட்டுதல்களை  எந்த குறுக்கீடும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது.

சட்டம் தன் கடமையை செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.  எப்போதும் போல  இப்போதும் போல  முதல்வரை  ராஜினாமா செய்ய சொல்வது நியாயமல்ல. முதல்வர் அறிவித்த ஊரடங்கு காலத்தில்  காவல்துறையின் அரசின் மற்ற துறைகளும்  ஆற்றிய பணிகளை  மக்கள் அறிவார்கள்,  எத்தகைய அநீதி நடந்திருந்தாலும் சட்டத்தின் ஆட்சி   மக்களை உயிர் காக்கும் பணியில் காவல்துறை மருத்துவர்கள், பிற துறையினர் இரவு பகலாக பணியாற்றியதை மக்கள் அறிவார்கள்,

தன்னுயிரை  பணயம் வைத்து கடமையாற்றி எத்தகை அநீதி நடந்திருந்தாலும் சட்டத்தின் மூலம் நீதியை நிலை நாட்ட முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்,  சட்டம் தன் கடமை செய்யும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜானிடாம் வர்கீஸ், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர், மண்டல உதவி ஆணையர் பால்தங்கதுரை, போலிஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம், மண்டல சுகாதாரத்துறை டாக்டர்கள் இளஞ்செழியன், மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து