உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. கொரோனா தொற்று உறுதி

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
kumaraguru-admk-mla 2020 07 02

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுருவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து