அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      தமிழகம்
Minister Selur Raju wife Jayanthi

Source: provided

மதுரை : கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,  சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  ஜெயந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மனைவி ஜெயந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், பரிசோதனை முடிவில் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து