மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்ட செரீனா வில்லியம்ஸ்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      விளையாட்டு
Serena Williams 2020 07 04

Source: provided

நியூயார்க் : மகளின் புகைப்படத்தை அதிகம் வெளியிடாத செரீனா வில்லியம்ஸ் தற்போது இருவரும் பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ்.  23- முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். அமெரிக்காவை சேர்ந்த செரினா வில்லியம்சுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

39-வயதான செரீனா வில்லியம்ஸ் தனது  2 வயது மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இணையவாசிகளின் உள்ளம் கவர்ந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து