முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 9 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் இரு பகுதியாக நாடு முழுவதும் 6-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வுகளை மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்கள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. 

இதனால் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு அவர்களின் முந்தைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே புதிய கல்வியாண்டான ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தாலும் அவை முழுமையான அளவில் பயனளிக்கவில்லை என்பதாலும். கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வேலை நாட்கள் குறைப்பாலும், பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கை எழுந்து வந்தது.

இதனிடையே நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடவேளைகள் குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவீதம் சி.பி.எஸ்.இ. பாடச் சுமையை குறைக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார். உலகளவில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பாடச் சுமையை குறைக்க தாம் அறிவுறுத்தி உள்ளேன். 1,500 கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துக்களை பரிசீலித்து பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து