முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று வழியாக பரவும் கொரோனா : உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

புதன்கிழமை, 8 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டு உள்ளது,

காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான ஆதாரங்களை 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். மே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைத் திருத்துமாறு அவர்கள் கேட்டு கொண்டு உள்ளனர். எவ்வாறாயினும், வைரஸ் காற்றில் உள்ள துகள் மூலம் பரவுவதற்கான சான்றுகள் நம்பத்தகுந்ததாக இல்லை என்று சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு  ஒப்புக் கொண்டு உள்ளது, கொரோனாவை பரப்பும் முறைகளில் ஒன்றாக காற்றின் மூலம் பரவுதல் மற்றும் ஏரோசல் பரவுதல் பற்றி பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து  வருகிறோம். உலக சுகாதார அமைப்புன் கொரோனா வைரஸ்  தொற்றுநோய்க்கான தொழில்நுட்ப நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து