முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் பிளாஸ்மா தெரபி மையம் சச்சின் டெண்டுல்கர் திறந்து வைத்தார்: ரத்த தானம் செய்ய வேண்டுகோள்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பையில் பிளாஸ் தெரபி மையத்தை திறந்து வைத்த சச்சின் டெண்டுல்கர், குணமடைந்தோர் ரத்த தானம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் என்ற அரக்கன் உலகையே அச்சுறுத்தி வருகிறான். இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை குடித்துள்ளான். தற்போது இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறான். அவனிடம் இருந்து மக்களை மீட்க டாக்டர்கள், செவிலியர்கள் போராடி வருகின்றனர். லேசான அறிகுறி, அறிகுறி இல்லாத நோயாளிகள் நோய் எதிர்ப்பு மருந்துகள் மூலம் குணமடைய வைத்து விடுகிறார்கள். மூச்சு திணறல் அதிகமாகி வென்டிலேட்டர் வரை செல்லும் பெரும்பாலானோர் உயிரை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இவர்களை காப்பாற்ற கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இப்படிபட்டவர்களை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்த பிளாஸ்மாவை பெற்று ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிக்கு செலுத்தி அவர்களின் உயிரை காத்து வருகின்றனர். பிளாஸ்மா தெரபி அதிக அளவில் கைக்கொடுக்கிறது. இதனால் டெல்லி முதன்முதலாக பிளாஸ்மா வங்கியை தொடங்கியது. மற்ற மாநிலங்களும் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் மும்பை மாநகராட்சியும் பிளாஸ்மா தெரபி மையத்தை தொடங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிளாஸ்மா தெரபி மையத்தை திறந்து வைத்தார். மேலும், குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பிளாஸ்மா தெரபி மையத்தை திறந்து வைத்த சச்சின் டெண்டுல்கர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நமது உயிர்களை காப்பாற்ற எதிர்பார்க்காத சவால்களை சந்தித்து வருகிறோம். நமது டாக்டர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஸ்டாப், போலீஸ், நகராட்சி, அரசு ஸ்டாப் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். கொரோனவை முறியடிக்க தடுப்பு மருந்து, சிகிச்சை குறித்து உலகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிளாஸ்மா தெரபி மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்த சேவையை தொடங்கிய மும்பை மாநகராட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது உயிர்களை பாதுகாப்பும்.கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட்ட மக்கள் தானகவே முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய உதவி மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்களை காப்பாற்றும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து