முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை போலீசார் மே மாதம் கைது செய்தனர்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் திருத்தணிகாசலம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது.  அத்துடன், அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.  

இந்நிலையில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் குண்டர் சட்டத்தை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்டவை நிலுவையில் உள்ளதால் அவரால் வெளியே வர முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து