முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி : விரைவில் குணமடைய ஓ.பி.எஸ். வேண்டுதல்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கொரோனா தொற்றால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அமைச்சர் அன்பழகனைத் தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணியும் கொரோனா தொற்றால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன், மனைவி, மருமகள் மற்றும் கார் ஓட்டுநர் என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மனைவி ஜெயந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும். எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து