CM Photo 2020 07 13

Source: provided

சென்னை : கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் தொடர்ந்து விலையில்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று  (செவ்வாய்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.  இதில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து