முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று அமைச்சர்கள் நலமுடன் உள்ளனர் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

திங்கட்கிழமை, 13 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வரும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், பி.தங்கமணி ஆகியோர்  நலமுடன் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

சென்னை திரு.வி.க.நகர் மண்டலத்தில்  கொரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கு  சத்து மாத்திரைகள் மற்றும் கவச உடைகள்,  நோய்த்தொற்றில் இருந்து மீண்ட 5 மாநகராட்சி ஊழியர்களுக்கு  பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

உலகம் முழுவதும் ஒரு கோடியே 28 லட்சம் பேர் இந்த கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் இதுவரை சந்தித்திராத நோய்த்தொற்று. மனித குலமே இதுவரை பார்த்திராத வரலாற்றில் அறியாத நோய்த்தொற்று கொரோனா நோய்த்தொற்று இந்த நோய்த்தொற்று கடந்த மார்ச் மாதம் முதல் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த தொற்று மருத்துவ பரிசோதனை தமிழகத்தில் கிட்டதட்ட 42 ஆயிரத்து 531 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு  லட்சத்து 38 ஆயிரத்து 420 பேர்  அதில் 89 ஆயிரத்து 522 பேர் குணமடைந்திருக்கிறார்கள், கண்ணுக்கு தெரியாத எதிரியை வீழ்த்தும் யுத்தத்தில் ஆயுதங்களின்றி மக்களை காக்கும் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணையோடும் அக்கறையோடும் மேற்கொண்டு வெற்றிப்பாதையில் பயணித்துள்ளார்,  இதுவரை 89 ஆயிரம் பேர் குணமடைந்திருப்பது பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.  

மாநகரை விட்டே பலர்  காலி செய்து மற்ற நகரங்களுக்கு சென்ற நிலையில்  வாழவே தகுதியற்ற நகரம் என்று சென்னை மாநகரம் என்று தகவல்கள் பரப்பப்பட்டன, அப்படிப்பட்ட சென்னை மாநகரை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் வருவாய்த்துறை பணியாளர்கள் மூலம் நோய்த்தொற்றில் சென்னையில் சோதனைகளை அதிகப்படுத்தி, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வியூகம் வகுத்து காப்பாற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போது தான் முகக்கவசம் அணிந்து வரும் காட்சியை காண முடிகிறது,

ஆனால்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் மாதமே முகக்கவசம் அணிந்து மற்றவர்களுக்கு ரோல் மாடலாக விளங்கினார். ஊரடங்கு நேரத்தில் யாருமே வெளியே வரக்கூடாது என்பதற்காக தான் இ-பாஸ் வழங்கப்படுகிறது, இதில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம், இறப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க முடியாது.

இந்த வகை அவசிய தேவைகளுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது,அவை தேவையானவர்களுக்கு கிடைக்க வேண்டும், தேவையில்லாதவர்கள் முயற்சி மேற்கொண்டால்  தேவையானவர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், இ-பாஸ் விவகாரத்தில்  முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது,

இதில் தேவைப்பட்டால் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு முதல்வரின் அனுமதியோடு இ-பாஸ் வழங்கப்பட்டது குறித்து புள்ளி விபரங்களை வழங்க தயாராக இருக்கிறோம்.   ஊரடங்கு என்பது மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டப்படி பிறப்பிக்கப்பட்டது, மருத்துவ நிபுணர் குழு உலக சுகாதார அமைப்பு போன்றவற்றின் அமல்படுத்தப்பட்டது.

சென்னையில் மட்டுமில்லாமல் தென்மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தோறும் கூடுதலாக நடமாடும் காய்ச்சல் கிளினிக் சிகிச்சையை மேற்கொள்ள வேணடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்,  மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும், என்றும் ,சத்து மாத்திரைகள் வழங்கவும்  வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார், நடமாடும் காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுவதற்கு முன்பு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் மக்கள் தான் முகக்கவசம் அணிந்தார்கள்,

இப்போது 85 சதவீதம் மக்கள் முகக்கவசம் அணியத்தொடங்கி இருக்கிறார்கள், நூறு சதவீதம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது  நமது இலக்கு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், இதில் ஊரடங்கு தேவையில்லை என்று கூறி விடமுடியாது, குடிசைப்பகுதி மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த அவர்களை சந்தித்து விபரமறியவும் தீவிர சிகிசசைகள் அளிக்கவும் ஊரடங்கு நல்ல பலனை அளித்திருக்கிறது, நோய் எதிர்ப்பு சக்திக்கான உயர்தரமான மருந்துகளை வழங்க முதல்வர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்,

நெரிசல் மிக்க சென்னை போன்ற மாநகரங்களில் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வும் நடவடிக்கையில் ஊரடங்கு நல்ல பலனை அளித்திருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் 100 சதவீதம் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற அடிப்படையில் டெண்டர் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

டெண்டர் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த டெண்டர் குறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு வாரங்களில் வெளியிடுவார். தற்போதைய கொரோனா நோய்த்தொற்று காலக்கட்டத்தில் இணைய யுகத்தில் பாரத்நெட் என்பது நமக்கு கிடைத்த வரபிரசாதம், தனியார் ஆளுகையில் இருந்து அரசின் மூலம் பாரத்நெட் வந்தால் மிகச்சிறந்த பலன் ஏற்படும். 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. 

உலகளாவிய அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பப்ஜி செயலியை தடை விதிப்பது அரசின் கவனத்தில் கொண்டு செல்லப்படும்,என்று அவர் பதிலளித்தார், மேலும் மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் பரிபூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புவார்கள் அதற்காக நாங்கள் இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்,  இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து