முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு வரும் 14-ம் தேதி வரை சி.பி.ஐ. காவல்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 16- ம் தேதி வரை சி.பி.ஐ. காவல் அளிக்கப்பட்டது

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜை காவலில் எடுக்க சி.பி.ஐ.  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சி.பி.ஐ. காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 

சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசாரை விசாரிப்பது மிக முக்கியமான ஒன்று என சி.பி.ஐ. சார்பில் வாதிடப்பட்டது. காவலில் எடுத்து விசாரிக்க கோருவது ஏன்? என சி.பி.ஐ. தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.  சி.பி.ஐ. காவலில் செல்வது குறித்து 5 போலீசாரிடமும் நீதிபதி தனித்தனியே கேட்டறிந்தார்.  அப்போது சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாரும் சி.பி.ஐ. காவலில் செல்ல ஒப்புதல் அளித்து உள்ளனர்.

மேலும் வழக்கறிஞர்கள் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என 5 போலீசாரும் கோரிக்கை வைத்து உள்ளனர்.  அதை தொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு வரும்  16-ம் தேதி வரை சி.பி.ஐ. காவல் அளிக்கப்பட்டது  சி.பி.ஐ. 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் 3 நாள் அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 5 பேரும் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.  தொடர்ந்து, ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடமும் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது. மதுரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து