முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என்று ஐகோர்ட் மதுரைக் கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனையை தவிர்க்க, உடல் வெப்ப நிலையை குறைத்துக்காட்ட பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, பல மருந்துகங்களில் பாரசிட்டமால் மாத்திரைகள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசு இது தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க உத்தரவிடக் கோரி ஜோயல் சுகுமார் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், நேற்று பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிடமால் மாத்திரை வழங்கக் கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் அதே சமயம், மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரையை வழங்க மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, எவ்விதத் தட்டுப்பாடும் இன்றி பாராசிட்டமால் மாத்திரை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி,ஜோயல் சுகுமார் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரைக் கிளை முடித்து வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து