முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் காசிரங்கா பூங்காவில் வாழும் தங்க நிறப்புலி

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திஸ்பூர் : அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இந்தியாவில் உள்ள ஒரே ஒரு தங்கநிறப் புலியின் படம் வெளியாகி உள்ளது.

கப்பல் நிறுவன மேலாளரும், வன உயிரின புகைப்பட நிபுணருமான மயூரேஷ் ஹென்றி என்பவர் காசிரங்கா வனப்பகுதியில் சுற்றி வந்த போது இந்தப் புலியைப் படம் பிடித்துள்ளார்.  மிகவும் அரிதாகக் காணப்படும் இந்தப் புலி தற்போது இந்தியாவில் ஒன்று மட்டுமே உள்ளது. 

சாதாரண புலிகளை விட வெளிறிய பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்தப் புலி, மற்றவைகளை விட முக அமைப்பும் சற்று மாறுபாடு கொண்டது. டாபி புலி என்றும் ஸ்ட்ராபெரி புலி என்றும் அழைக்கப்படும் இது, உடலில் கருப்பு நிறக் கோடுகளுக்குப் பதிலாக சிவப்பு மற்றும் பழுப்பு நிறக் கோடுகளையும், பொன்னிறமான ரோமங்களையும் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

உலகில் அதிக புலிகள் வாழும் இடமாக காசிரங்கா தேசியப் பூங்கா உள்ளது. இதன் காரணமாக 2006-ல் இந்த பூங்கா புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது.  இங்கு புலிகளை கணக்கெடுப்பது என்பது பெரும் சவாலானதாகும்.  யானைகள், ராஜ நாகங்கள், காட்டு எருமைகள், மான்கள், 100க்கும் மேற்பட்ட பறவை வகைகள் இப்பூங்காவினுள் வாழ்கின்றன.

‘பேர்ட்ஸ்லைப் இன்டர்நேஷனல்’ என்னும் அமைப்பு உலகில் பறவைகள் வாழும் முக்கியமான இடங்களில் ஒன்றாக இதனை குறிப்பிடுகிறது. மிகப்பெரிதாக வளரக்கூடிய பாம்பு வகைகளான ஆசிய மலைப்பாம்பு, ராக் பைதான், அதிக விஷம் கொண்ட ராஜ நாகங்கள் போன்ற பாம்பு வகைகளும் இங்கே வாழ்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து