முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி இன்று பயணம்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020
Image Unavailable

Source: provided

சென்னை : கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று 15-ம் தேதி கிருஷ்ணகிரி, நாளை 16-ம் தேதி சேலம், ஜூலை 17-ல்  ஈரோடு ஆகிய தேதிகளில் முதல்வர் பயணம் மேற்கொள்கிறார்.  

ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ. 63 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோட்டில் ரூ.13 கோடியில் புதிதாக வீட்டுவசதி வாரிய அலுவலகங்கள், வணிக வளாகம் கட்டுவதற்கும் சம்பத் நகரில் ரூ.2.60 கோடி மதிப்பில் மாவட்ட கருவூல அலுவலகம் கட்டுவதற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து, ஈரோடு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் பி.சி.ஆர். பரிசோதனை மையத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து