முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: 469 ரன்கள் குவித்து இங்கிலாந்து டிக்ளேர்: சிப்லி, ஸ்டோக்ஸ் சதம்

சனிக்கிழமை, 18 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சிப்லி, ஸ்டோக்ஸ் ஆகியோரது அபார சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 469 ரன்கள் ‘குவித்து’ டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 81 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பிறகு தொடக்க வீரர் டாம் சிப்லியும், பென் ஸ்டோக்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி 86 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 59 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து நிதானமாக ஆடிய சிப்லி தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார்.

சதத்தை எட்ட அவருக்கு 312 பந்துகள் தேவைப்பட்டது. இங்கிலாந்து மண்ணில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு அடிக்கப்பட்ட மந்தமான சதம் இதுதான். உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.

உணவு இடைவேளைக்கு பிறகு பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஸ்டோக்ஸ் தனது 10-வது சதத்தை எட்டினார். செஞ்சுரியை கடந்ததும் ஸ்டோக்ஸ் மட்டையை வேகமாக சுழட்டினார். பந்தை அவ்வப்போது எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டார்.

 

அணியின் ஸ்கோர் 341 ரன்களாக உயர்ந்த போது டாம் சிப்லி (120 ரன், 372 பந்து, 5 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் வீசிய பந்தை தூக்கியடித்த போது, கெமார் ரோச்சிடம் சிக்கினார்.

மறுமுனையில் மிரட்டிய பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களில் (356 பந்து, 17 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். பின்வரிசையில் ஜோஸ் பட்லர் (40 ரன்), டாம் பெஸ் (31 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்தனர்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதலாவது இன்னிங்சை தொடங்கி ஆடியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து